சங்க இலக்கியங்களில் இராமன்

 

தமிழ் சங்க இலக்கியங்களில் இராமர்

சங்க இலக்கியங்கள் உலகின் மிகப் பழமையான இலக்கியங்களில் ஒன்றாகும். பல அறிஞர்கள் சங்க இலக்கியங்களை ஆய்வு செய்தார்கள், சங்க இலக்கியங்கள் மதச்சார்பற்றவை என்று தெரிவித்தனர், ஆனால் ராமர், கிருஷ்ணா், சிவன், இந்திரன் போன்ற பல இந்து கடவுள்களின் குறிப்புகள் சங்க இலக்கியங்களிள் உள்ளன. பல வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, ஆர்யவர்த்தம் (வட இந்தியா) மற்றும் திராவிடம் (தென்னிந்தியா) இடையேயான பேதங்களை ராமர் குறைத்தார் என குறிப்பிட்டுள்ளனர். பல பாண்டிய மன்னர்கள் ராமாயணத்தை சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் மொழியில் மொழிபெயர்க்க புலவர்களுடன் முயன்றனர். புகழ்பெற்ற தமிழ் அறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமி , தனது "மறைந்து போனா தமிழ் நூல்கள்" புத்தகத்தில், ராமாயணம் தமிழில் எழுதப்பட்டது, பின்னர் அது காலவோட்டத்தில் மறைந்தன என குறிப்பிட்டுள்ளார். ஆகவே சங்ககாலத்தில் ராமர் வழிபாடு இருந்தது என்று நாம் கருதலாம்.

www.inforoarcurious.com
www.inforoarcurious.com

ஸ்ரீ ராமரின் சங்க இலக்கிய குறிப்புகள்

 தமிழ் சங்க இலக்கியத்தில், ஸ்ரீ ராமரின் குறிப்புகள் கீழ்கண்ட செய்யுள்களிள் காணப்படுகின்றன

1. புறநானூறு செய்யுள் எண் 378.

2. அகநானூறு செய்யுள் எண் 70.

3. திருப்பரங்குன்றம் ஓவியங்கள் ( நப்பண்ணனார் 3 ஆம் நூற்றாண்டு A.D ).

4. பழமொழி நானூறு.

5. சிலப்பதிகாரம் (தமிழர்களின் புகழ்பெற்ற காவியம்)




www.inforoarcurious.comசங்க இலக்கியங்களில் இராமர்


புறநானூறு செய்யுள் எண் 378.

தென் பரதவர் மிடல் சாய,
வட வடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்,
கடுமா கடை இய விடுபரி வடிம்பின்,
நற்றார்க் கள்ளின்சோழன் கோயில்,

5

புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்றுஎன்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்லமிகப்பல,

10

மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனேஅது கண்டு,
இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்,
விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்,
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்,

15

அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தா அங்கு,

20

அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே,
இருங்குளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.

 மேற்கண்ட புறநானூற்றுச் செய்யுளில் 13 முதல் 23 வரை உள்ள வரிகளில் ராமாயண குறிப்பு காணப்படுகிறது இதைப்
 

 பாடியவர்; ஊன்பொதி பசுங்குடையார். பாடப்பட்டோன்; சோழன் இளஞ்சேட் சென்னி. இப்பாடலின் பொருள் யாதெனில் வஞ்சிக்கோட்டையை தகர்த்ததற்காக இளஞ்செட்சென்னியை புலவர்கள் பலர் புகழ்ந்தனர் அதற்காக அவர்கள் பல பரிசுகள் பெற்றனர். அப்பரிசுகளில் உள்ள ஆபரணங்களை கண்ட புலவர்களின் உறவினர்கள் அந்த ஆபரணங்களை சகட்டுமேனிக்கு அணிந்து கொண்டனர், அது எப்படி இருந்தது என்றால் ராமனின் மனைவி சீதையை அரக்கன் கவர்ந்து செல்லும் பொழுது அவள் தனது ஆபரணங்களை இராமன் குறிப்பால் உணர்ந்து கொள்ளும்படி தரையில் வீசினாள் அதைக்கண்ட செம்முகம் கொண்ட குரங்குகள் அந்த ஆபரணங்களை கழுத்தில் அணிவது இடுப்பிலும் இடுப்பில் அணிவதை கழுத்தில் அணிந்து மகிழ்ந்தன.


www.inforoarcurious.com


அகநானூறு செய்யுள் எண் 70


கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென,

இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்

குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி,

கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன்

2

நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே    5

அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற,

பலரும் ஆங்கு அறிந்தனர் மன்னேஇனியே

3

வதுவை கூடிய பின்றைபுதுவது

பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்

கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப்      10

பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்

விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்

வென் வேற் கவுரியர் தொல் முது கோடி

முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,

வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த     15

பல் வீழ் ஆலம் போல,

ஒலி அவிந்தன்றுஇவ் அழுங்கல் ஊரே.



இச்செய்யுளில் 13 முதல் 17 உள்ள வரிகளில்," பாண்டிய நாட்டிலுள்ள தனுஷ்கோடியில் பரந்து விரிந்த ஆலமரத்தின் கீழ் ராமன் மற்றும் அவரது குழுவினருடன் இலங்கையின் மீது போர் தொடுக்க ஆலோசனை செய்யும் பொழுது அம்மரத்தில் இரைச்சல் இட்ட பறவைகள் ராமன் சொல் கேட்டு அமைதி ஆகின".





பழமொழி நானூறு

பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து,
இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல்
’’

பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. செய்யுளின் பொருள் யாதெனில்" விபீடணன், இலங்கை வேந்தன் ராவணனின் தம்பி. அவன் ராமனின் நட்பைபெற்றதால் இலங்கைக்கு அரசன் ஆனான். அதுபோல அறிவிற் பெரியாரை துணையாகக் கொண்டால் நாம் பல பலன்களை பெறலாம்".



சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் தமிழர்களால் கொண்டாடப்படும் காப்பியமாகும். சிலப்பதிகாரம், மதுரைக் காண்டத்தில் உள்ள ஆய்ச்சியர் குரவையில் திருமாலைப் பற்றிய பாடலில் ராமன் திருமாலின் அவதாரம் என்று குறிப்பிடப்படுகிறது இதன் மூலம் சங்க காலத்தில் ராமனின் வழிபாடு பற்றிய குறிப்புகளை காணலாம்.

மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!

-
ஆய்ச்சியர் குரவைப் பாடல், மதுரைக்காண்டம்
,

www.inforoarcurious.com

Comments

Popular posts from this blog

True story of ARUNIMA SINHA

பரிபாடல் போற்றும் மாயோன்